இதுவரையில் அமெரிக்க அதிபராக இருந்தவர்களின் மனைவியர் செய்யாத செயலை செய்து ஆச்சரியப்படுத்தும் ஜோ பைடன் மனைவி! என்ன தெரியுமா?
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், கல்லுாரி மாணவ - மாணவியருக்கு மீண்டும் நேரிடையாக வகுப்புகளை எடுக்கத் துவங்கி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், வடக்கு வெர்ஜீனியா கம்யூனிட்டி கல்லுாரியில் பேராசிரியையாக 2009 முதல் பணியாற்றி வருகிறார்.
கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் பள்ளி, கல்லுாரி வகுப்புகள் ஓன்லைன் வழியாகவே நடத்தப்பட்டு வருகின்றன. ஜில் பைடனும் ஓன்லைன் வழியாகவே பாடங்களை நடத்தி வந்தார். கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து அமெரிக்காவில் கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, வடக்கு வெர்ஜீனியா கல்லுாரிக்கு நேற்று சென்று மாணவ - மாணவியருக்கு ஜில் பைடன் பாடம் சொல்லிக் கொடுத்தார். அமெரிக்க அதிபராக இதற்கு முன் இருந்தவர்களின் மனைவியர் யாரும், வேறு எங்கும் வேலைக்கு சென்றதில்லை.
அமெரிக்க அதிபராக இருந்த புஷ்ஷின் மனைவி லாரா, கணவர் அதிபர் ஆனதும் துவக்கப் பள்ளி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டார். அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி, ஒபாமாவின் மனைவி மிச்செல் ஆகியோர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.