41வது சதம்! 160 ஓட்டங்கள் விளாசல்..அவுஸ்திரேலியாவை அதிர வைத்த ஜோ ரூட்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்டில், இங்கிலாந்தின் ஜோ ரூட் 160 ஓட்டங்கள் விளாசினார்.
ஜோ ரூட்
சிட்னியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

முதல் இன்னிங்க்சை ஆடிய இங்கிலாந்து அணி 384 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் (Joe Root) 15 பவுண்டரிகளுடன் 160 ஓட்டங்கள் விளாசினார். இது அவரது 41வது டெஸ்ட் சதம் ஆகும்.
அதிக சதங்கள் அடித்தவர்கள்
இதன்மூலம் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்குடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளார்.
ரூட்டிற்கு அடுத்து ஹாரி ப்ரூக் 84 ஓட்டங்களும், ஜேமி ஸ்மித் 46 ஓட்டங்களும் எடுத்தனர்.
மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளும், போலண்ட் மற்றும் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |