அதிரடியாக 60வது அரைசதம் விளாசல்! ஜாம்பவானின் சாதனையை நொறுக்கிய ரூட்
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் விளாசியதன் மூலம் ஜோ ரூட் முன்னாள் வீரர் அலெஸ்டர் குக்கின் சாதனையை சமன் செய்தார்.
ஜோ ரூட் அதிரடி
லண்டன் ஓவலில் கடைசி ஆஷஸ் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆடி வருகிறது. டக்கெட் மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் தலா 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஜக் கிராவ்லே 73 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜோ ரூட் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் அதிரடியாக 42 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
It was only a matter of time...
— England Cricket (@englandcricket) July 29, 2023
Root RAMPS for six! ? #EnglandCricket | #Ashes pic.twitter.com/RvdTtdVEv6
குக் சாதனையை சமன் செய்த ரூட்
இது அவருக்கு 60வது அரைசதம் ஆகும். இதன்மூலம் 90 முறை 50 ஓட்டங்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்த முன்னாள் வீரர் அலெஸ்டர் குக்கின் சாதனையை சமன் செய்தார்.
ஜோ ரூட் 30 சதங்கள், 60 அரைசதங்கள் எடுத்துள்ள நிலையில், குக் 33 சதங்கள், 57 அரைசதங்கள் அடித்துள்ளார். மேலும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 1,500 ஓட்டங்கள் குவித்துள்ளார் ஜோ ரூட்.
அதே போல் டெஸ்ட் தொடரில் அதிக முறை 300 ஓட்டங்கள் எடுத்த முன்னாள் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் சாதனையையும் (18) ஜோ ரூட் முறியடித்தார்.
Nothing to see here...
— England Cricket (@englandcricket) July 29, 2023
Just Joe Root cruising to another England 5️⃣0️⃣ ?
??????? #ENGvAUS ?? | @IGCom pic.twitter.com/fIqbLz6KO9
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |