ஜோ ரூட்டின் ஆட்டத்தினால் இலங்கையை வீழ்த்திய இங்கிலாந்து அணி: கேப்டனாக முதல் வெற்றி பெற்ற போப்
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓல்டு டிராஃப்போர்டு டெஸ்ட்
இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரின் ஓல்டு டிராஃப்போர்டு மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 236 ஓட்டங்களும், இங்கிலாந்து 358 ஓட்டங்களும் எடுத்தன.
அடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை 326 ஓட்டங்கள் எடுத்தது. கமிந்து மெண்டிஸ் 113 ஓட்டங்கள் குவித்தார்.
ஜோ ரூட் நங்கூர ஆட்டம்
பின்னர் 205 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. பென் டக்கெட் 11 ஓட்டங்களும், போப் 6 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
டேனியல் லாரன்ஸ் 34 ஓட்டங்கள் எடுத்து மிலன் ஓவரில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஜோ ரூட் (Joe Root) நங்கூரம்போல் நின்று ஆடினார். மறுபுறம் ஹாரி புரூக் 32 ஓட்டங்களும், ஜேமி ஸ்மித் 39 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
Sent ??
— England Cricket (@englandcricket) August 24, 2024
Catch Up: https://t.co/3J9ouQuVTn ?
??????? #ENGvSL ?? #EnglandCricket pic.twitter.com/DRboENmcJT
எனினும் ஜோ ரூட் 64வது டெஸ்ட் அரைசதம் அடித்தார். இதன்மூலம் டெஸ்டில் அதிக அரைசதம் அடித்த ஆலன் பார்டர், ராகுல் டிராவிட் ஆகியோர் முந்தி 3வது இடத்திற்கு முன்னேறினார்.
முதல் டெஸ்ட் வெற்றி
மேலும் அவர் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 111 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்சில் 39 ஓட்டங்களும் எடுத்த ஜேமி ஸ்மித் (Jamie Smith) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஓலி போப்பிற்கு (Ollie Pope) இது கேப்டனாக முதல் டெஸ்ட் வெற்றியாகும்.
? Victory in Manchester! ???????
— England Cricket (@englandcricket) August 24, 2024
A winning start to the series ?
Match Centre: https://t.co/WlpxJWmDmV
??????? #ENGvSL ?? | #EnglandCricket pic.twitter.com/h3fGFuCyM1
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |