பந்துவீச்சில் பயம் காட்டிய ஜோ ரூட்: இலங்கை அணி 219 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை 219 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
நிதான கூட்டணி
கொழும்பில் நடந்து வரும் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாடியது. கமில் மிஷாரா 5 ஓட்டங்களில் ஓவர்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Ishara S.KODIKARA/AFP/Getty Images
பின்னர் ஓரளவு ஓட்டங்களை சேர்ந்த பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ் தலா 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் தனஞ்செய டி சில்வாவுடன் அணித்தலைவர் சரித் அசலங்கா கைகோர்த்தார். இந்தக் கூட்டணி நிதானமாக அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
Ishara S.KODIKARA
அணியின் ஸ்கோர் 134 ஆக உயர்ந்தபோது, தனஞ்செய டி சில்வா (Dhananjaya de Silva) 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சரிந்த விக்கெட்டுகள்
அடுத்து லியானகே (12), அசலங்கா (45) ஆகியோர் அவுட் ஆக, இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.
Getty Images
20 ஓட்டங்களில் இருந்த வெல்லலகேயின் விக்கெட்டையும், அசிதா பெர்னான்டோவின் விக்கெட்டையும் ஜோ ரூட் கைப்பற்ற, இலங்கை அணி 49.3 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
AFP/GETTY IMAGES
ஜோ ரூட் (Joe Root), ஜேமி ஓவர்டன் மற்றும் அடில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளும், ரெஹான் அகமது, டவ்ஸன் மற்றும் வில் ஜேக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Ishara S.KODIKARA/AFP/Getty Images
Innings Break: Sri Lanka finishes with 219.
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) January 24, 2026
The stage is set for our bowlers to do the damage. 219 to defend, 10 wickets to take. Let’s go, boys! 🔥🙌#SLvENG #SriLankaCricket pic.twitter.com/vbM12fYpJs
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |