டெஸ்டில் இமாலய சாதனை படைத்த ஜோ ரூட்! நெருங்க முடியாத இடத்தில் இலங்கை ஜாம்பவான்
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்டில் 12,000 ஓட்டங்களை கடந்தார்.
எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.
தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அரைசதம் விளாசினார்.
அதிரடியாக ஆடிய ஸ்டோக்ஸ் 69 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து அரைசதம் விளாசிய ஜோ ரூட் (Joe Root) 12,000 ஓட்டங்களை கடந்தார். இதன்மூலம் இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற இமாலய சாதனையை படைத்தார்.
அலாஸ்டைர் குக் 33 வயது 13 நாட்களில் 12,000 ஓட்டங்கள் எட்டிய நிலையில், ஜோ ரூட் 33 வயது 210 நாட்களில் எட்டியுள்ளார்.
? 1️⃣2️⃣,0️⃣0️⃣0️⃣ ?
— England Cricket (@englandcricket) July 27, 2024
We are witnessing GREATNESS! ? pic.twitter.com/OLuS4GKn2H
அதேபோல் குறைந்த இன்னிங்ஸ்களில் 12,000 ஓட்டங்களை எட்டிய 6வது வீரர் என்ற சாதனையையும் ரூட் படைத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இலங்கையின் குமார் சங்கக்காரா (224) முதலிடத்தில் உள்ளார்.
அதிவேகமாக 12,000 ஓட்டங்கள் எட்டிய வீரர்கள்
- குமார் சங்கக்காரா (இலங்கை) - 224
- ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா) - 247
- சச்சின் டெண்டுல்கர் - 247
- ஜாக்யூஸ் கல்லில் - 249
- ராகுல் டிராவிட் - 255
- ஜோ ரூட் - 261
- அலாஸ்டைர் குக் - 275
⬆️ Joe Root | 11,954*
— England Cricket (@englandcricket) July 27, 2024
⬇️ Brian Lara | 11,953
Joe Root takes another step up the mountain ?️ pic.twitter.com/4rZBeBKps6
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |