சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்த ஜோ ரூட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனை ஒன்றை ஜோ ரூட் முந்தியுள்ளார்.
ஓவல் டெஸ்ட்
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ஓட்டங்களும், இங்கிலாந்து அணி 247 ஓட்டங்களும் குவித்தது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இதில், இங்கிலாந்து வீரர் 29 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
29 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 84 போட்டிகளில் விளையாடி, 23 சதங்கள் மற்றும் 33 அரைசதங்கள் உட்பட 7,224 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
சச்சினை முந்திய ஜோ ரூட்
இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் அதிக ஓட்டங்களில் எடுத்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக, இந்திய மண்ணில் சச்சின் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 22 சதங்கள் மற்றும் 32 அரைசதங்கள் உட்பட 7,216 ரன்கள் எடுத்திருந்தார்.
அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், அவுஸ்திரேலிய மண்ணில் 7,578 ஓட்டங்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
15,921 ஓட்டங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த பட்டியலில், சச்சின் முதலிடத்தில் உள்ளார்.
13438 ஓட்டங்களுடன் 2வது இடத்தில் உள்ள ஜோ ரூட்டிற்கு, இந்த சாதனையை முறியடிக்க இன்னும் 2483 ஓட்டங்களே தேவைப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |