ஒரே ஓவரில் 31 ஓட்டங்கள்; மோசமான சாதனை படைத்த ஜோயல் டேவிஸ்
joel davis creates unwanted history 31 runs in over vs australia: இங்கிலாந்திற்கு எதிரான 2வது T20 போட்டியில், அவுஸ்திரேலியா வீரர் ஜோயல் டேவிஸ் ஒரே ஓவரில் 31 ஓட்டங்கள் வழங்கி, T20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்கள் வழங்கிய அவுஸ்திரேலிய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து வெற்றி
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது T20 போட்டி இன்று குயின்ஸ்லாந்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய அவுஸ்திரேலியா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது.

அவுஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக Nikhil Chaudhary 45 ஓட்டங்களும், Joel Davies 39 ஓட்டங்களும் குவித்தனர்.
185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 13.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பில் சால்ட் 58 ஓட்டங்களும், Aneurin Donald 85 ஓட்டங்களும் குவித்தனர்.
இதன் மூலம், இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மோசமான சாதனை படைத்த ஜோயல் டேவிஸ்
இதில், அவுஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் ஜோயல் டேவிஸ் வீசிய 7வது ஓவரில், இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 1 சிக்ஸர், 4 பவுண்டரி உட்பட 31 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம் T20 கிரிக்கெட்டில், ஒரு ஓவரில் அதிக ஓட்டங்கள் வழங்கிய அவுஸ்திரேலிய வீரர் என்ற மோசமான சாதனையை ஜோயல் டேவிஸ் படைத்துள்ளார்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் கிளென் மேக்ஸ்வெல் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 30 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.