உண்மை வெல்லும் என நம்பினேன்: சுவிஸில் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் நிரபராதி..பிரபலத்தின் பதிவு
மைக்கேல் ஷூமேக்கரின் செவிலியரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட, அவுஸ்திரேலிய கார் பந்தய வீரர் உண்மை வெல்லும் என்று நம்பியதாக தெரிவித்துள்ளார்.
கார் பந்தய வீரர்
அவுஸ்திரேலியாவின் பிரபல கார் பந்தய வீரரான Joey Mawson, கடந்த 2019ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா அருகே உள்ள கிளாண்ட் என்ற இடத்தில் தங்கியிருந்தார்.
ஜேர்மனியின் முன்னாள் கார்பந்தய வீரரான மைக்கேல் ஷூமேக்கருக்கு சொந்தமான மேன்ஷனில் Joey Mawson தங்கியிருந்தபோது, செவிலியர் ஒருவரை இரண்டு முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த Mawson, குறித்த பெண்ணின் சம்மதத்துடன் தான் உறவு வைத்துக்கொண்டதாக கூறினார்.
இந்த வழக்கு தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "Mawson-ஐ குற்றவாளியாக்க போதுமான ஆதாரம் இல்லை" என்றும், "அவரது நற்பெயருக்கு எந்தக் களங்கமும் இல்லாமல்; அவர் ஒரு சுதந்திர மனிதராக வெளியேற அனுமதிக்கப்பட்டார்" என்றும் நீதிபதி கூறினார்.

மேலும், Mawson-யின் வழக்கறிஞர் கூறும்போது, 'அவர் நிரபராதி. அவர் இப்போது அவுஸ்திரேலியாவிற்கு திரும்பி, தனது எதிர்காலத்தை அமைத்துக்கொண்டு, தன் வாழ்க்கையைத் தொடர்வார்' என்று கூறினார்.
புதிய அத்தியாயம்
இந்த நிலையில், Joey Mawaon தனது சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு, 'ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாக' அறிவித்து அறிக்கை ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், "கடந்த 3 ஆண்டுகளாக, என் வாழ்க்கையின் மிகவும் கடினமான காலகட்டங்களில் ஒன்றைக் கடந்து செல்லும்போது, நான் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தேன்.
அந்த நேரத்தில், நான் பொய்யான குற்றச்சாட்டுகளையும், தீவிரமான பொது கண்காணிப்பின் கீழ் என் பெயரை பாதுகாக்கும் சவாலையும் எதிர்கொண்டேன். ஆரம்பத்தில் இருந்தே நான் நிரபராதி என்று கூறி, உண்மை வெல்லும் என்று நம்பினேன். இன்று நான் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறேன்" என கூறியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |