ஐபிஎல் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல் - ஷாக்கான ரசிகர்கள்
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் முனைப்பில் மும்பை இந்தியன்
தற்போது 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டிப்போட்டுக் கொண்டு களத்தில் அனல் தெறிக்க விளையாடி வருகிறது.
இந்நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன.
சமீபத்தில் சென்னையிடம் விளையாடிய மும்பை அணி வெறும் 139 ஓட்டங்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனையடுத்து சொந்த மண்ணான மும்பையில் இன்று மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் மொத்தம் 10 ஆட்டங்களில் 5 வெற்றியும், 5 தோல்வியையும் பதிவு செய்துள்ளது. இனி வரும் ஆட்டங்கள் மும்பை அணிக்கு மிக முக்கியமாக உள்ளது.
ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை அணியின் வேகப் பந்து வீச்சாளரும், ஆல் ரவுண்டருமான ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகுவதாக ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் காயம் ஏற்பட்டதால் மும்பை அணி வீரர் ஆர்ச்சர் விலகி இருப்பதாகவும், இவர் முழு உடல் தகுதியை பெறுவதற்காக இங்கிலாந்திற்கு திரும்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக க்ரிஸ் ஜோர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
????? ?????? ????? ?????? ???????
— Mumbai Indians (@mipaltan) May 9, 2023
Chris Jordan will join the MI squad for the rest of the season.
Chris replaces Jofra Archer, whose recovery and fitness continues to be monitored by ECB. Jofra will return home to focus on his rehabilitation.… pic.twitter.com/wMPBdmhDRf