ஐபிஎல் மீண்டும் துவங்கினால் விளையாடுவேன்! ஆர்ச்சரின் பதிலால் கடும் ஷாக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான, ஜோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் மீண்டும் நடத்தப்பட்டால் நான் விளையாடுவேன் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாகவும், வீரர்களிடையே சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாகவும், ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர், நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தால் எப்படியும் சீக்கிரம் வீடு வந்திருக்கலாம். மீண்டும் ஐபிஎல் நடைபெறும் என்று அறிவித்தால், நான் விளையாட முடியும் என்று நம்புகிறேன்.
காயம் ஏற்பட்டவுடன் இந்தியாவுக்குச் செல்லக்கூடாது என்பது நான் எடுத்த கடினமான முடிவு. நான் நிச்சயம் இந்தியா சென்றிருக்க முடியும். அப்படி சென்றிருந்தால், என்னால் எத்தனை போட்டிகளில் ஆடியிருக்க முடியும் என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.
ஒரு புறம் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூற, ஆனால் ஆர்ச்சரோ இப்படி கூறுவதால், இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.