ஜாக்கிங், ரன்னிங், ஸ்பிரின்டிங். செய்வதன் வித்தியாசம் என்ன?
ஜாக்கிங், ரன்னிங், ஸ்பிரின்டிங் இப்படி மூன்று பெயர்களில் அழைக்கிறார்கள். இவை மூன்றுக்குமான வித்தியாசங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்
ஜாக்கிங்
உங்களது வேக அளவு ஒரு மைல் தூரத்திற்கு 10 நிமிடம் என்ற கணக்கில் இருக்கும். உங்களது வேகம் அதை விட அதிகமானால், அது 'ரன்னிங்' பயிற்சியாகிவிடும். அதனால் மிதமான வேகத்தை பராமரிக்க வேண்டும்.
மேலும் ஜாக்கிங் செய்யும்போது நீங்கள் சீராக சுவாசிப்பதும் அவசியம். அப்போதுதான், இதயத்துடிப்பு சாதாரணமாக இருக்கும்.
அதிக தொலைவிற்கு ஜாக்கிங் செய்ய உதவும். உடலில் கார்டிசால் அளவை ஜாக்கிங் குறைக்கும். மேலும் இதய ஆரோக்கியத்திற்கு இது சிறந்ததாகும்.
ரன்னிங்
இது ஜாக்கிங்கை விட இருமடங்கு ஆற்றல் கொண்ட உடற்பயிற்சி. அதனால் அதிக கலோரிகளை எரிக்க முடியும்.
ஆனால் ஜாக்கிங்கைவிட, ரன்னிங் பயிற்சிக்கு அதிக ஆற்றலும், வெகுநாள் பயிற்சியும் அவசியம்.
உங்களது கால் களின் உறுதிக்கு ரன்னிங் உதவியாக இருக்கும். மேலும் இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக அமையும்.
ஸ்பிரின்டிங்
தன் இயல்பான ஓட்டத்திறனைவிட, சற்று வேகமாக ஓடுவதுதான் ஸ்பிரின்டிங். இதில் தனது வழக்கமான ஓட்ட வேகத்தை விட அதிகபட்ச வேகத்தை சீராக பராமரிக்க வேண்டும்.
மேலும் ஸ்பிரின்டிங்கில் செயல்பட அதிக ஆற்றல் தேவைப்படும்.
இது குறைந்த தூரத்தை வேகமாக கடக்க உதவும். இந்த உடற்பயிற்சியானது அதிகபட்ச கலோரிகளை எரிக்கவும், நுரையீரலின் செயல்பாட்டை அதிகப் படுத்தவும் உதவும். ஸ்பிரின்டிங் இளைஞர்களின் எடை குறைப்பு முயற்சியை விரைவாக செயல்படுத்த சிறந்ததாகும்.