நமக்கு வெட்கக்கேடு! இந்த நிலைக்கு வந்துவிட்டோம் - பிரபல நடிகரின் ஆதங்க வீடியோ
ஐஎஸ்எல் கால்பந்து தொடரை நடத்த முடியாமல் போனது நமக்கெல்லாம் வெட்கக்கேடு என்று நடிகர் ஜான் ஆபிரகாம் கூறியுள்ளார்.
ஐஎஸ்எல் கால்பந்து தொடர்
ஐபிஎல் கிரிக்கெட் போல் ஐஎஸ்எல் (ISL) கால்பந்து தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.
Shame on us … this is what we have come to. pic.twitter.com/BS5NZIlFvf
— John Abraham (@TheJohnAbraham) January 4, 2026
AIFF மற்றும் FSDL ஆகியவற்றுக்கு இடையேயான மாஸ்டர் உரிமைகள் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை காரணமாக, 2025-26 ISL சீசன் ஜூலை மாதம் நிறுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தமானது கடந்த டிசம்பர் 8ஆம் திகதி அன்று காலாவதியானது.
இந்த நிலையில்தான் கால்பந்து வீரர்கள் சுனில் சேத்ரி, குர்பிரீத் சிங் சந்து மற்றும் சந்தேஷ் ஜிங்கன் உள்ளிட்டோர் வீடியோ ஒன்றில் பேசியிருந்தனர்.

ஜான் ஆபிரஹாம் ஆதங்கம்
அதில், "இந்த நிலைமை விரைவாகத் தீர்க்கப்படாவிட்டால், இந்திய கால்பந்து நிரந்த முடக்கத்தை நோக்கி செல்லும். இது ஜனவரி மாதம்; இந்தியன் சூப்பர் லீக்கில் ஒரு போட்டி கால்பந்து ஆட்டத்தின் ஒரு பகுதியாக நாங்கள் உங்கள் திரைகளில் தோன்றியிருக்க வேண்டும்.
அதற்கு பதிலாக, நாம் அனைவரும் அறிந்த ஒன்றை உரக்க சொல்வதற்காக, பயம் மற்றும் விரக்தியால் உந்தப்பட்டு இங்கே இருக்கிறோம்" என கூறியிருந்தனர்.
இதனை இந்தி நடிகர் ஜான் ஆபிரஹாம் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, "நமக்கு இது வெட்கக்கேடு...இந்த நிலைக்குத்தான் நாம் வந்துவிட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஒப்பந்தம் காலாவதியானது உச்ச நீதிமன்றத்தின் தலையீடு தேவைப்படும் ஒரு ஒப்பந்த முடக்கத்திற்கு வழிவகுத்தது.
நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வணிக உரிமைகளுக்கான டெண்டர் வெளியிடப்பட்டது. ஆனால், அது ஏலதாரர்களை ஈர்க்கத் தவறிவிட்டது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |