சிக்ஸர் அடித்து 23 ஆண்டுகளுக்கு பின் முதல் சதம்! இந்திய அணியை மிரட்டிய வீரர்
இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் மேற்கிந்திய தீவுகளின் ஜான் கேம்ப்பெல் சாதனை சதம் விளாசினார்.
ஜான் கேம்ப்பெல்
டெல்லியில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது.
தகெனரைன் சந்தர்பால் 10 ஓட்டங்களிலும், அலிக் அதனசி 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, ஜான் கெம்ப்பெல் மற்றும் ஷாய் ஹோப் வலுவான கூட்டணி அமைத்தனர்.
நங்கூரமாக நின்று ஆடிய ஜான் கேம்ப்பெல் (John Campbell) சிக்ஸர் அடித்து சதம் விளாசினார். இது அவரது முதல் டெஸ்ட் சதம் ஆகும்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு
இதன்மூலம் அவர் ஒரு அரிய மைல்கல்லை எட்டினார். அதாவது 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் டெஸ்ட் சதம் அடித்த முதல் மேற்கிந்திய தீவுகள் தொடக்க வீரர் கேம்ப்பெல் ஆவார்.
கடைசியாக 2002ஆம் ஆண்டில் ஈடன் கார்டன் மைதானத்தில் வேவெல் ஹிண்ட்ஸ் (Wavell Hinds) சதம் விளாசியிருந்தார்.
மேலும், முதல் சதத்தை பதிவுசெய்ய அதிக இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம்பெற்றார்.
முதல் சதம் அடிக்க ட்ரேவோர் காட்டார்ட் 58 இன்னிங்ஸும், டேரென் கங்கா 44 இன்னிங்ஸும், இம்ருல் கேயஸ் 32 இன்னிங்ஸும், பாப் சிம்ப்சன் 31 இன்னிங்ஸும் எடுத்துக் கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |