தோல்வியுடன் விடைபெற்ற ஜான் சீனா! முடிவுக்கு வந்த 17 முறை சாம்பியனின் சகாப்தம்
WWE மல்யுத்த வீரர் ஜான் சீனா கடைசி போட்டியில் தோல்வியுடன் விடைபெற்றார்.
ஜான் சீனா
ஹாலிவுட் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் ஜான் சீனா, WWE மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 
அதன்படி அவரது கடைசிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் மல்யுத்த வீரர் கன்தர் உடன் ஜான் சீனா மோதினார்.
ஆனால், டேப் அவுட் முறையில் இந்தப் போட்டியில் ஜான் சீனா தோல்வியுற்றார். இத்துடன் அவரது 23 ஆண்டுகால WWE சகாப்தம் முடிவுக்கு வந்தது.
17 முறை சாம்பியன்
எல்லா காலத்திலும் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்றவர் ஜான் சீனா. 2005யில் முதல் வெற்றியை (WrestleMania 21) சாம்பியன் பட்டத்தை வென்ற இவர், மொத்தமாக 17 சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.
மேலும் 2009, 2010 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் சிறந்த சூப்பர் ஸ்டார் உட்பட 10 முறை Slammy விருது வென்றிருக்கிறார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |