ஐபிஎல் போட்டிகளில் விளையாட சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் - முன்னாள் MI வீரர் குற்றச்சாட்டு
ஐபிஎல் போட்டிகளை இப்போது நிறுத்த வேண்டும் என அவுஸ்திரேலியா முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தொடங்கும் ஐபிஎல்
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 ஆம் திகதி தொடங்கி ஜூன் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
போட்டி இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியான உடன், ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருந்த வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தங்களது நாடுகளுக்கு திரும்பினர்.
தற்போது ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கு வர மறுத்தாலும், பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா திரும்பி வருகின்றனர்.

IPL 2025; போர் பதற்றத்தால் நாடு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் - புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ள பிசிசிஐ
வெளிநாட்டு கிரிக்கெட் அமைப்புகளை தொடர்பு கொண்ட பிசிசிஐ, அந்த நாட்டு வீரர்களை மீண்டும் ஐபிஎல் போட்டிகளுக்கு அனுப்பி வைக்குமாறு நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.
மிட்செல் ஜான்சன்
இந்நிலையில் முன்னாள் அவுஸ்திரேலியா வீரரான மிட்செல் ஜான்சன் ஐபிஎல் போட்டிகளை நிறுத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், "கிரிக்கெட் ஆஸ்திரேலியா வீரர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அதிகாரம் அளித்திருந்தாலும், அந்தத் தேர்வுகளின் முடிவு கடினமானதாக இருக்கலாம். விளையாட வேண்டாம் என்று வீரர்கள் முடிவு செய்தால், தொழில் முறையில் நிதி இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு ஏற்படும்.
ஆனால், பாதுகாப்பைத்தான் முதல் மற்றும் முக்கிய விஷயமாகப் பார்க்க வேண்டும். இந்தியாவுக்குத் திரும்பிச் சென்று போட்டியை முடிக்க வேண்டுமா என்று நான் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தால், அது எளிதான முடிவாக இருக்கும். அது என்னுடையது அல்ல. உயிரும் பாதுகாப்பும் மிக முக்கியமான விஷயம், சம்பளம் இல்லை.
இது அவரவர் தனிப்பட்ட முடிவு. எந்த வீரரையம் கட்டாயப்படுத்த கூடாது. ஐபிஎல் தொடரோ அல்லது பிஎஸ்எல் தொடரோ, அதற்காக நாம் கடினமாக முயற்சிக்க முடியாது. அந்த இரண்டு தொடர்களும் இப்போதே நிறுத்தப்பட வேண்டும் அல்லது அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். அப்படிச் செய்தால் மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஒரு வார காலத்திற்கு முன்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தயாராக வேண்டிய நிலை உள்ளது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |