மூட்டு வலிக்கு நிரந்த தீர்வு தரும் இலை; இப்படி பத்து போட்டால் போதும்!
பொதுவாகவே வயதாகும் போது அனைவரும் எதிர்க்கொள்ளும் ஒரு பொது பிரச்சினையாக முழங்கால் வலி , மூட்டு வலி இருகின்றது.
இது ஒருவருக்கு வருகின்றது என்றால், அவர்களுடைய அன்றாட வேளைகளானது பாதிக்கப்படும்.
அடிக்கடி முழங்கால் வலி ஏற்படுவதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் காணப்படுவதில்லை. ஊட்டசத்து குறைபாடு காரணமாக ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக மருத்துவ செலவு செய்து நீக்குவதற்கு பதிலாக இயற்கையான முறையில் எப்படி நிரந்தர தீர்வை பெறலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
நொச்சி இலை
இந்த இலையானது சைனசிடிஸ், தலைவலி, தசைவலி மற்றும் மூட்டு வலிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. நோச்சி இலையானது ரிங்வோர்ம், அரிக்கும் தோலழற்சி மற்றும் பல்வேறு தோல் நோய்த்தொற்றுகள், கல்லீரல் கோளாறுகள், மண்ணீரல் விரிவாக்கம், வாத வலி, கீல்வாதம், சீழ் மற்றும் முதுகுவலி ஆகியவற்றிற்கு எதிராகவும் செயல்படுகிறது
இந்த பதிவில் எப்படி மூட்டு வலிக்கு பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
மூட்டு வலிக்கு தீர்வு தரும் நொச்சி இலை
முதலில் மிக்ஸியில் இந்த இலைகளை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
இந்த சாற்றை மூட்டு வலி இருக்கும் பகுதியில் தடவி, பத்து போட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மூட்டு வலியானது ஒரு வாரத்திற்குள் நீங்கும்.
ஒரு தேக்கரண்டி நொச்சி இலை சாருடன் சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் நெய் சேர்த்து காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி உடல் வலி வீக்கம் இடுப்பு வலி என பல்வேறு நோய்களும் குணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |