100 பந்துகள் தொடரில் 226 ரன் குவித்த அணி! வாணவேடிக்கை காட்டி ருத்ரதாண்டவமாடிய வீரர்
The Hundred Mens தொடரில் ஓவல் அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெல்ஷ் ஃபையர் அணியை வீழ்த்தியது.
ஜோர்டன் காக்ஸ் 86 ஓட்டங்கள்
லண்டன் ஓவலில் நடந்த போட்டியில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் மற்றும் வெல்ஷ் ஃபையர் அணிகள் மோதின.
That's out of The Kia Oval!!! 🤯#TheHundred pic.twitter.com/ufH84gVuzj
— The Hundred (@thehundred) August 16, 2025
முதலில் களமிறங்கிய ஓவல் அணியில் டவண்டா முயியே 33 ஓட்டங்களும், வில் ஜேக்ஸ் 38 ஓட்டங்களும் விளாசி வெளியேறினர்.
அடுத்து சாம் கர்ரன் 19 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களும், ஃபெர்ரெய்ரா 6 பந்துகளில் 18 ஓட்டங்களும் எடுத்தனர்.
ருத்ர தாண்டவமாடிய ஜோர்டன் காக்ஸ் (Jordan Cox) 29 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் விளாசி களத்தில் நின்றார்.
இதன்மூலம் ஓவல் அணி 4 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் குவித்தது. மேட் ஹென்றி 2 விக்கெட்டுகளும், கிரீன், ஸைப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பேர்ஸ்டோவ் 50 ஓட்டங்கள்
பின்னர் ஆடிய வெல்ஷ் ஃபையர் (Welsh Fire) அணி 93 பந்துகளில் 143 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது.
அதிகபட்சமாக அணித்தலைவர் ஜானி பேர்ஸ்டோவ் (Jonny Bairstow) 28 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் குவித்தார்.
டாம் கர்ரன் (Tom Curran) 4 விக்கெட்டுகளும், பெஹ்ரென்டோர்ஃப் 3 விக்கெட்டுகளும், சாம் கர்ரன், ஸாகிப் மற்றும் ரஷீத் கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Incredible. #TheHundred pic.twitter.com/FfDHVQbWew
— The Hundred (@thehundred) August 16, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |