ஐபிஎல்-ஐ விட சிறந்ததாக இருக்க முடியாது! ஏன் அதை அழிக்க வேண்டும்? The Hundred கிண்ணம் வென்ற வீரர்
The Hundred வடிவ கிரிக்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என ஜோர்டான் காக்ஸ் வாதாடுகிறார்.
ஜோர்டன் காக்ஸ்
சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் இன்வின்சிபிள்ஸ் (Oval Invincibles) அணி The Hundred 2025 கிண்ணத்தை வென்று மகுடம் சூடியது.
இறுதிப்போட்டியில் ஓவல் வீரர் ஜோர்டன் காக்ஸ் (இங்கிலாந்து) 28 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்கள் விளாசினார்.
இந்த தொடர் குறித்து அவர் பேசும்போது, The Hundred இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு ஏற்றது என்றும், டி20 வடிவத்திற்கு அதனை மாற்றுவதன் மூலம் ஐபிஎல் (IPL) உடன் போட்டியிட முயற்சிக்கூடாது என்றும் வாதிட்டார்.
அப்படியே இருக்கட்டும்
மேலும் பேசிய காக்ஸ், "கூட்டத்தில் இருந்து தனித்து நிற்க Hundred 100 பந்து போட்டியாக இருக்க வேண்டும். அதை இரண்டாவது சிறந்ததாக மாற்ற முயற்சிப்பதில் என்ன பயன்?
இது இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு சரியானது.
அப்படியே இருக்கட்டும். நண்பர்கள், குடும்பங்கள், குழந்தைகள் வந்து பார்க்க விரும்புகிறார்கள். ஏன் அதை அழிக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |