இந்தியாவுக்கு எதிராக சிக்ஸர்மழை! பட்லர் 131, ப்ரூக் 95 ஓட்டங்கள் விளாசல்..258 ரன் இலக்கு
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி தி ரோஸ் பௌல் மைதானத்தில் நடந்து வருகிறது.
பட்லர் ருத்ரதாண்டவம்
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்ய இங்கிலாந்து துடுப்பாடியது.

பிலிப் சால்ட் 6 ஓட்டங்களில் வெளியேற, ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி ப்ரூக் கூட்டணி வாணவேடிக்கை காட்டியது.
நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜோஸ் பட்லர் (Jos Buttler) 51 பந்துகளில் சதம் விளாசினார். மொத்தம் 64 பந்துகளை எதிர்கொண்ட அவர், 8 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 131 ஓட்டங்கள் குவித்தார்.
ப்ரூக் மிரட்டல்
மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹாரி ப்ரூக் (Harry Brook) ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 95 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் குவித்தது. ஷிவம் தூபே 2 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |