டி20யில் 100 அரைசதங்கள்! லக்னோவை சம்பவம் செய்த பட்லர்
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லர் 14,000 ஓட்டங்கள் குவித்த 5வது வீரர் என்ற இமாலய சாதனையை படைத்தார்.
ஜோஸ் பட்லர்
லக்னோவில் நடந்த ஐபிஎல் 2026 19வது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
Jos Buttler is putting on a complete masterclass out in the middle 👊
— IndianPremierLeague (@IPL) April 12, 2026
14,000 T20 runs and a monumental 100th T20 FIFTY for the Englishman 👏
Updates ▶️ https://t.co/kIuuJYbiNx#TATAIPL | #KhelBindaas | #LSGvGT | @gujarat_titans pic.twitter.com/UnmUIcgqpC
இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் (Jos Buttler) அரைசதம் விளாசினார்.
இதன்மூலம் அரிய சாதனைப் பட்டியல் ஒன்றில் அவர் இணைந்தார். அதாவது, டி20 கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்களை எட்டிய ஐந்தாவது வீரர் ஜோஸ் பட்லர் ஆவார்.
அவருக்கு முன்பாக மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல், கிரான் பொல்லார்ட், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் டேவிட் வார்னர் இந்த மைல்கல்லினை எட்டியவர்கள் ஆவர்.
அதேபோல் டி20யில் 100 அரைசதங்கள் (சதங்களையும் சேர்த்து) கடந்த வீரர் என்ற சாதனையையும் பட்லர் படைத்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |