12.1 ஓவரிலேயே 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி: இலங்கைக்கு எதிராக பட்லர் இமாலய சாதனை
இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் சாதனை படைத்தார்.
இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சாதனை படைத்தார்.
லியாம் டாவ்ஸன்
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கார்டிஃப்பில் நடந்தது.

முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்தது. நிசங்க 37 (21) ஓட்டங்களும், அசலங்கா 31 ஓட்டங்களும் எடுத்தனர்.
அபாரமாக பந்துவீசிய லியாம் டாவ்ஸன் 3 விக்கெட்டுகளும், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட்டுகளும், பேக்கர், ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 12.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டாம் பான்டன் 52 (24) ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 30 (16) ஓட்டங்களும், ஹாரி ப்ரூக் 23 (8) ஓட்டங்களும் விளாசினர்.
ஜோஸ் பட்லர் சாதனை
டி20யில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற இமாலய சாதனையை ஜோஸ் பட்லர் (Jos Buttler) படைத்தார்.
கிரோன் பொல்லார்ட் 14,999 ஓட்டங்கள் குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், ஜோஸ் பட்லர் 15,000 ஓட்டங்கள் எடுத்து அதனை முறியடித்தார்.
இந்தப் பட்டியலில் அலெக்ஸ் ஹால்ஸ், கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், விராட் கோஹ்லி ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
