T20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்துள்ள ஜாஸ் பட்லர்
T20 கிரிக்கெட்டி அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீரர் என்ற சாதனையை ஜாஸ் பட்லர்(Jos Buttler) படைத்துள்ளார்.
WF vs MSG
'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் வெல்ஷ் பயர் அணிகள் மோதியது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய வெல்ஷ் பயர் அணி 100 பந்துகள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் குவித்தது.
156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், 69 பந்துகளில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 156 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
ஜோஸ் பட்லர் சாதனை
இதில், ஜோஸ் பட்லர் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 51 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில், 51 ஓட்டங்கள் குவித்துள்ளதன் மூலம், T20 போட்டியில் மொத்தமாக 14,833 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலம், T20 போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்துள்ள வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக பொல்லார்ட் 746 போட்டிகளில் விளையாடி 14,803 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
பட்லர் 522 போட்டிகளில் 14,833 ஓட்டங்கள் குவித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |