33 பந்தில் 85 ரன்! சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை புரட்டியெடுத்த வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 85 ஓட்டங்கள் விளாசினார்.
வாணவேடிக்கை
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.

முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மார்ஷ் 10 ஓட்டங்களிலும், பூரன் 1 ரன்னிலும் நடையைக் கட்டினர்.
ஆனாலும், ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis) வாணவேடிக்கை காட்டி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்ந்தினார்.
204 ரன் இலக்கு
அதிரடி அரைசதம் அடித்த இங்கிலிஸ் 33 பந்துகளில் 85 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.

இங்கிலிஸுக்கு பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஷாபாஸ் அகமது (Shah Ahmed) சரவெடியாக 25 பந்துகளில் 43 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசினார்.

இதன்மூலம் லக்னோ அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் குவித்தது. ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |