21 ஆண்டுகளுக்கு பின் வங்காளதேசம் கொடுத்த மரண அடி: காரணம் கூறிய அவுஸ்திரேலிய கேப்டன்
வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததன் காரணம் குறித்து கேப்டன் ஜோஷ் இங்லிஸ் பேசியுள்ளார்.
21 ஆண்டுகளுக்கு பிறகு
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் 86 ஓட்டங்கள் (DLS விதிப்படி) வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Nahid Rana Shows Continues! Another one down for Australia. Xavier Bartlett departs! 🚀 pic.twitter.com/BN2hBSMW60
— Bangladesh Cricket (@BCBtigers) June 9, 2026
21 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய அணியை வங்காளதேசம் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
தோல்விக்கு பிறகு அவுஸ்திரேலிய கேப்டன் ஜோஷ் இங்லிஸ், "எங்களைப் பொறுத்தவரை இது மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒரு ஸ்கோர். வெளிப்படையாக சொன்னால், நாங்கள் நான்கு அல்லது ஐந்து கேட்சுகளை தவறவிட்டிருப்போம்.
284 ஓட்டங்கள் என்பது ஒருபுறம் இருக்க, இதுவே 230 அல்லது 240 ஓட்டங்களாக இருந்திருந்தால், இதை எளிதாக எட்டியிருக்க முடியும் என்று நான் கருதினேன். ஆனால், ஒட்டுமொத்தமாகவே இது ஒரு ஏமாற்றமளிக்கும் நாளாக அமைந்தது" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |