இந்திய அணிக்கு எதிராக 532 ஓட்டங்கள் குவித்த அவுஸ்திரேலியா! 87 பந்துகளில் 123 ஓட்டங்கள் விளாசிய வீரர்
இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்டில் அவுஸ்திரேலிய ஏ அணி 532 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
சாம் கோன்ஸ்டாஸ் 109
லக்னோவில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதி வரும் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
அவுஸ்திரேலிய ஏ அணி முதலில் இன்னிங்சை தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு 198 ஓட்டங்களை குவிக்க, கேம்பெல் கெல்லாவே 88 (97) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து சதம் விளாசிய சாம் கோன்ஸ்டாஸ் 109 (144) ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த மெக்ஸ்வீனி (1), ஒலிவர் பீகே (2) ஆகியோர் சொதப்பினர்.
எனினும் கூப்பர் கோனொலி 70 ஓட்டங்களும், லியாம் ஸ்காட் 81 ஓட்டங்களும் குவித்தனர். விக்கெட் கீப்பர் ஜோஷ் பிலிப் ருத்ர தாண்டவம் ஆடினார்.
ஜோஷ் பிலிப் 123 ஓட்டங்கள்
அவர் ஆட்டமிழக்காமல் 87 பந்துகளில் 123 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 18 பவுண்டரிகள்) விளாச, அவுஸ்திரேலிய ஏ அணி 532 ஓட்டங்களுக்கு டிக்ளேர் செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய ஏ அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டுக்கு 116 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அபிமன்யு ஈஸ்வரன் 44 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜெகதீசன் 50 ஓட்டங்களுடனும், சாய் சுதர்சன் 20 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |