சிக்ஸர்மழை பொழிந்த கேப்டன் பூரன்! 53 பந்துகளில் 90 ஓட்டங்கள் விளாசல்
ஆன்டிகுவா அணிக்கு எதிரான போட்டியில் பூரனின் ட்ரின்பாகோ அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கோஸ், ஜாங்கூ அரைசதம்
கயானாவில் நடந்த CPL 2025 போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஆன்டிகுவா அன்ட் பார்புடா பால்கான்ஸ் அணிகள் மோதின.
Nicholas Pooran finally standing up for TKR with an excellent 90* (53) in the eliminator of the CPL 💥#TKRvABF #CPL2025
— Cricketism (@MidnightMusinng) September 17, 2025
pic.twitter.com/6lzO9oLDWB
முதலில் ஆடிய ஆன்டிகுவா அணி 8 விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் குவித்தது.
ஆன்ரிஸ் கோஸ் 45 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்களும், ஆமிர் ஜாங்கூ 49 பந்துகளில் 55 ஓட்டங்களும் விளாசினர்.
ஷாகிப் அல் ஹசன் 9 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 26 ஓட்டங்கள் எடுத்தார். நேத்ராவல்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பூரன் ருத்ரதாண்டவம்
பின்னர் களமிறங்கிய ட்ரின்பாகோ அணியில் காலின் மன்ரோ 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) வாணவேடிக்கை காட்டினார்.
அலெக்ஸ் ஹால்ஸும் (Alex Hales) அதிரடி காட்ட 18வது ஓவரிலேயே ட்ரின்பாகோ வெற்றி பெற்றது.
சிக்ஸர் மழைபொழிந்த பூரன் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் குவித்தார்.
ஹால்ஸ் ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |