மழை பாதிப்பு குறித்து Live -ல் பேசிய செய்தியாளர்.., திடீரென ஆற்றில் விழுந்ததால் பரபரப்பு
வெள்ள பாதிப்புகள் குறித்து நேரலையில் பேசிய செய்தியாளர் திடீரென நிலை தடுமாறி ஆற்றில் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நேரலையில் செய்தியாளர்
இந்திய மாநிலமான அசாமில் கனமழை பெய்து வருவதால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில், வெள்ளத்தில் சிக்கி சுமார் 96 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 5.98 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் திணறுகின்றனர். மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர் ஒருவர் ஆற்றுக்கு அருகே மக்கள் சூழ, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தொலைக்காட்சி நேரலையில் செய்தி வழங்கி கொண்டிருந்தார்.
அப்போது அவர் கமெராவை பார்த்து பேசிக் கொண்டிருந்த போது ஈரமான மணல் பகுதியால் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தார்.
இதையடுத்து, அவர் நீந்தி வந்ததால் கிராம மக்கள் உதவியுடன் கரைக்கு வந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |