இரவெல்லாம் தூங்க முடியவில்லை! சீமான் மீது புகார் கொடுத்த பெண் வழக்கறிஞர்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நாமக்கல் எஸ்பியிடம் பெண் வழக்கறிஞர் புகார் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி குறித்து பேசிய சீமான்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பாடியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "கள்ளச்சாராயத்தை விற்றவர்களை எல்லாம் கைது செய்யாமல் மேடையில் பாடியதற்காக கைது செய்கிறீர்கள்.
எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளீர்கள்? என்னை விடவா அவர் அதிகமாக பேசிவிட்டார். என்னை சுற்றியிருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.
முன்னாள் முதலமைச்சரை கருணாநிதியை பற்றி அவதூறாக பாடியதால் கைது செய்துள்ளார்கள். இருக்கிற பாட்டை பாடுவதில் என்ன தவறு இருக்கிறது.
எழுதியவர், பாடியவரை விட்டுவிட்டு மறுபடியும் எடுத்து பாடியவரை கைது செய்கிறீர்கள். நான் இப்போது பாடுகிறேன், முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்" என்று கூறியிருந்தார்.
சீமான் மீது புகார்
இந்நிலையில், கருணாநிதி குறித்து தவறாக பேசி பாடல் பாடியதாக அவர் மீது நாமக்கல் எஸ்பியிடம் பெண் வழக்கறிஞர் அமுதா புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அமுதா கூறுகையில், "கருணாநிதி பற்றி கேவலமாக பேசி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடல் பாடியுள்ளார். தரக்குறைவாக பேசிய சீமான் மீது புகார் கொடுத்திருக்கிறேன்.
தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் கருணாநிதி ஆற்றிய தொண்டு யாராலும் ஈடு செய்ய முடியாது. அப்படிப்பட்ட தலைவரை சீமான் இவ்வாறு பேசுவது புண்படுத்துகிறது.
இரவில் தூங்க முடியவில்லை. ஏதோ பேசிவிட்டதாக கூறி சுப்பிரமணியசாமியை ஏர்போர்ட்டில் இறங்கவிடாமல் விரட்டியடித்தனர். அதேபோல சீமான் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவ்வாறு செய்யாததால் புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |