நீ 4 அடி தான் இருக்க., இத்தாலிய பிரதமர் மெலோனியை கேலி செய்த பத்திரிகையாளருக்கு அபராதம்
இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியை (Giorgia Meloni) கேலி செய்த பத்திரிகையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் உள்ள மிலன் நீதிமன்றம், பிரதமர் ஜார்ஜியா மெலோனியை கேலி செய்த பத்திரிகையாளருக்கு 5,000 யூரோக்கள் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 16,52,000) அபராதம் விதித்துள்ளது.
Reuters செய்தியின்படி, 2021 அக்டோபரில் மெலோனியின் உயரத்தைக் குறைத்து கேலி செய்ததற்காக 36 வயது பெண் பத்திரிகையாளர் ஜியுலியா கோர்ட்டேஸுக்கு (Giulia Cortese) மேலும் 1200 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை Body Shaming என்று நீதிமன்றம் கூறியது.
4 அடி தான் இருக்க, என்னை பயமுறுத்துகிறாயா...
2021-இல், சமூக ஊடகங்களில் மெலோனி மற்றும் கியுலியா இடையே சண்டை ஏற்பட்டது.
இதற்குப் பிறகு, இத்தாலியின் வலதுசாரிக் கட்சியான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் தலைவரான ஜார்ஜியா மெலோனி, பத்திரிகையாளர் கோர்ட்டஸுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
கோர்டெஸ் சமூக ஊடகங்களில் மெலோனியின் போலிப் படத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் பின்னணியில் பாசிசத் தலைவர் பெனிட்டோ முசோலினியின் படம் இருந்தது.
இதற்கு மெலோனி எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பத்திரிக்கையாளர் கோர்ட்டஸ் அந்த புகைப்படத்தை அகற்றினார்.
இருப்பினும், அடுத்த பதிவில் அவர் மெலோனியின் உயரத்தை கேலி செய்தார்.
கோர்டெஸ் தனது பதிவில், "உன்னால் என்னை பயமுறுத்த முடியாது மெலோனி. நீ வெறும் 1.2 மீற்றர் (4 அடி) உயரம் தான். என்னால் உன்னை பார்க்க கூட முடியவில்லை" என்று எழுதினார்.
கோர்டெஸின் இந்த அவமானகரமான நடத்தை குறித்து மெலோனி புகார் அளித்திருந்தார்.
இருப்பினும், 'தவறான புகைப்படம்' வழக்கில் கோர்ட்ஸை நீதிமன்றம் விடுவித்தது. முசோலினியுடன் மெலோனியைக் காட்டுவது குற்றமல்ல என்று நீதிமன்றம் கூறியது.
90 நாட்களுக்குள் தண்டனையை மேல்முறையீடு செய்ய கோர்டெஸுக்கு உரிமை உண்டு.
அதே நேரத்தில், மெலோனியின் வழக்கறிஞர் கோர்ட்டஸிடமிருந்து பெறப்பட்ட நஷ்டஈட்டை சில தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக கூறினார்.
இத்தாலியில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகரித்துள்ளன. பத்திரிகையாளர்களை மௌனமாக்குவதற்கான முயற்சிகள் இத்தாலியில் தீவிரமடைந்துள்ளதாக RWB கூறுகிறது.
பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காரணத்திற்காக, 2024-இல், உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இத்தாலி ஐந்து இடங்கள் சரிந்து 46-வது இடத்திற்கு வந்துள்ளது.
மெலோனி பத்திரிகையாளர்களை நீதிமன்றத்திற்கு இழுப்பது இது முதல் முறையல்ல. 2023-இல், ரோம் நீதிமன்றம் சிறந்த விற்பனையான எழுத்தாளர் ராபர்டோ சவியானோவுக்கு 1,000 யூரோக்கள் அபராதம் விதித்தது.
சவியானோ 2021-இல் தொலைக்காட்சியில் மெலோனியை அவமதித்தார். இத்தாலிக்கு வரும் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக மெலோனி மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதால் சவியானோ மீது கோபம் கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |