பொதுவெளியில் பழமொழி கூறியதால் சிறைத்தண்டனை பெற்ற முன்னணி பத்திரிகையாளர்
துருக்கியில் பழமொழி கூறி நாட்டின் ஜனாதிபதியை அவமதித்ததாக கூறி முன்னணி பெண் ஊடகவியலாளருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் முன்னணி ஊடகவியலாளர்களில் ஒருவர் Sedef Kabas. இவரே தற்போது ஜனாதிபதியை அவமதித்ததாக கூறி சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டவர்.
எதிர்க்கட்சிகளுக்கு தொடர்புடைய செய்தி ஊடகம் ஒன்றில் விவாதத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் Sedef Kabas நாட்டின் தற்போதைய நிலையை சுட்டிக்காட்டி இரண்டு பழமொழி கூறியுள்ளார்.
அந்த பழமொழியால் அவர் நாட்டின் ஜனாதிபதியை இழிவுபடுத்தியதாக கூறி அவர் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுகளை Sedef Kabas மறுத்துள்ளார்.
அவமதிப்பு வழக்கில் சிக்கியுள்ள Sedef Kabasகு நான்கு ஆண்டுகள் வரையில் தண்டனை கிடைக்கும் என்றே கூறப்படுகிறது.
செய்தி ஊடக நேரலையில் அவர் கூறுகையில், உயர் பொறுப்புக்கு வந்த பின்னர் பலரும் ஞானத்துடன் செயல்படுகின்றனர், ஆனால் அது உண்மையல்ல என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அரண்மனைக்குள் நுழைந்த மாத்திரம் காளை அரசனாவதில்லை, ஆனால் அரண்மனை கொட்டகையாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, இதே கருத்தை தமது டுவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், Sedef Kabas வெளியிட்ட அந்த கருத்து நாட்டின் ஜனாதிபதியை இழிவு படுத்தும் செயல் என குறிப்பிட்டு முதன்மை செய்தி தொடர்பாளர் Fahrettin Altun விமர்சித்திருந்தார். தொடர்ந்து ஜனாதிபதியை இழிவு செய்ததாக கூறி நள்ளிரவு 2 மணிக்கு Sedef Kabas கைது செய்யப்பட்டார்.
தற்போது இந்த விவகாரம் ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பழமொழிக்கு ஜனாதிபதி பயப்படுகிறாரா எனவும் கேள்வி எழுப்பட்டு வருகிறது.
துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan 2014ல் தேர்தல் மூலம் நாட்டின் முதல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் நீண்ட 11 ஆண்டுகள் துருக்கியின் பிரதமராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017