அதிகாரத்தை இழப்பாரா நெதன்யாகு? இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்? - பத்திரிகையாளர் Sufiyan
journalist sufian explains who will be next pm of israel in election result: இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் Sufiyan விரிவாக பேசியுள்ளார்.
இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்?
இஸ்ரேலில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 70% அதிகமான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

2023ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, நடைபெறும் தேர்தல் என்பதால், உலகளவில் இந்த தேர்தல் கவனம் பெற்றுள்ளது.
2009 - 2021, 2022 - 2026 வரை சுமார் 20 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வரும் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

நெதன்யாகு கூட்டணி 54 ஆசனங்களையும், பிரதான எதிர்க்கட்சிகள் கூட்டணி 49 ஆசனங்களையும், அரபு கட்சிகள் 17 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
ஆட்சி அமைக்க 61 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், இன்னும் கிட்டத்தட்ட 27 சதவீத வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் Sufiyan, நெதன்யாகு அதிகாரத்தை இழப்பாரா? காடி ஐசன்கோட் தலைமையிலான அணி ஆட்சியைக் கைப்பற்றுமா? அரபுக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? இஸ்ரேல் மக்கள் என்ன மனநிலையில் உள்ளனர் என்பது குறித்து விளக்கியுள்ளார்.