ஹார்மோஸ் நீரிணைக்காக மோதும் அமெரிக்கா; ஈரானின் ராஜதந்திரம்
journalist Sufiyan about iran us war: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போரின் நிலை குறித்து பத்திரிக்கையாளர் Sufiyan விரிவாக பேசியுள்ளார்.
ஈரான் - அமெரிக்கா போர்
ஈரான் மற்றும் அமெரிக்கா கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகிறது.
ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு, கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்தது.

மேலும், ஈரான் கடல் எல்லையை ஒட்டியுள்ள ஹார்மோஸ் நீரிணை அமெரிக்காவின் பகுதி எனவும், அதற்கு தம்முடைய பெயரை சூட்டபோவதாகவும் ட்ரம்ப் பேசி வந்தார்.
இந்நிலையில், ஓமன் கடற்பரப்பில் ஈரான் கன்னி வெடிகளை பதிப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், பொருளாதார தடைகளை விதிக்கவுள்ளதாக கூறிய நிலையில் தாக்குதலுக்கான அவசியம் என்ன?, ட்ரம்ப்பை ஈரான் மீதான தாக்குதலுக்கு நிர்பந்திப்பது யார்?, பொருளாதார தடைகளை ஈரான் எப்படி எதிர்கொள்ள போகிறது?, இந்த தாக்குதல் எப்போது வரை தொடரும்? என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை பத்திரிக்கையாளர் சூஃபியன் பகிர்ந்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |