ஈரானின் அச்சுறுத்தலுக்கு அமெரிக்கா பயந்தது எப்படி? பத்திரிக்கையாளர் Sufiyan விளக்கம்
iran - us war : ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உள்ள தற்போதையை நிலை குறித்து பத்திரிக்கையாளர் Sufiyan விரிவாக பேசியுள்ளார்.
ஈரான் - அமெரிக்கா போர்
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது.

ஈரான் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, உலகின் முக்கிய உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையையம் மூடியது.
இதன் பின்னர் இரு நாடுகளுக்குமிடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டாலும், மீண்டும் அவ்வப்போது தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்கா தற்போது தாக்குதலை நிறுத்தியுள்ளது.
ஈரான் உச்சத்தலைவர் கொல்லப்பட்ட பின்னர் குர்திஷ் போராளிகளை உள்ளே அனுப்பி ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு திட்டமிட்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதல் தற்போது ஈரானுக்கு சாதகமாகியுள்ளது.
அமெரிக்காவில் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தாக்குதலை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா தாக்குதலை நிறுத்தியது ஏன்?, ஈரானுக்கு இந்த போரினால் ஏற்பட்டுள்ள அனுகூலம் என்ன?, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவு எவ்வாறு உள்ளது என்பது குறித்து பத்திரிக்கையாளர் சூஃபியன் விளக்கமளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |