மாதம்பட்டி ரங்கராஜ் மாதம் ரூ.6,50,000 தர வேண்டும்: ஜாய் கிரிசில்டா மனுதாக்கல்
தனது பராமரிப்பு செலவுகளுக்காக, மாதம்பட்டி ரங்கராஜ் மாதம் ரூ.6.5 லட்சம் வழங்க உத்தரவிடக் கோரி ஜாய் கிரிசில்டா மனுதாக்கல் செய்துள்ளார்.
பராமரிப்பு செலவு
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டியது பரபரப்பானது. 
கர்ப்பிணியாக இருக்கும் ஜாய் கிரிசில்டா சமூக வலைத்தளங்களிலும் ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ரூ.6,50,000
அதில், "கர்ப்பிணியாக இருப்பதால் என்னால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை. தற்போது என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை.
7 மாத கர்ப்பிணியாக இருக்கும் எனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6,50,000 பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்று கூறப்படுகிறது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |