நானும் தாய் தான்... உரிமை கோரி நீதிமன்றம் ஏறிய பெண்: அருமையான தீர்ப்பு வழங்கிய கனேடிய நீதிபதி
பிரிட்டிஷ் கொலம்பியாவில், இயற்கை முறையில் கருத்தரித்த ஒரு குழந்தைக்கு ஒரு தாய்தான் இருக்கமுடியும் என சட்டப்படி பிறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில், அதை மாற்றி வித்தியாசமாக தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி ஒருவர்.
Olivia, Eliza என்ற இருபெண்கள் Bill என்ற நபருடன் இணைந்து வாழ்ந்துவந்த நிலையில், Eliza கர்ப்பமுற்றிருக்கிறார். அந்த குழந்தைக்கு Oliviaயும் ஒரு தாயாக இருப்பது என தம்பதியர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர்.
Bill, Eliza தம்பதிக்கு Clarke என்ற ஆண் குழந்தை பிறந்த நிலையில், மருத்துவ ரீதியாக தாய்ப்பால் கொடுக்க தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டுள்ளார் Olivia.
சொல்லப்போனால், பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால் கொடுத்ததே Oliviaதானாம். இப்படியே எல்லாம் மகிழ்ச்சியாக சென்ற நிலையில், குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெறும்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
Bill, Eliza தம்பதி, பாலுறவின் மூலம் அந்த குழந்தையைப் பெற்றுள்ளதால், அவர்கள் மட்டுமே குழந்தையின் பெற்றோர் என்று கூறி, பிறப்புச்சான்றிதழில் Oliviaவின் பெயரைச் சேர்க்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
சட்டமும் அப்படித்தான் கூறுகிறது, ஒரு வேளை செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பிறந்திருந்தால் மூவரின் பெயரையும் பிறப்புச் சான்றிதழில் சேர்த்திருக்கலாம்.
ஆனால், Clarke இயற்கை முறையில் கருத்தரித்ததால், Bill, Eliza தம்பதி மட்டுமே அவனது பெற்றோர் என அதிகாரிகள் கூறிவிட்டனர். இதை எதிர்த்து Olivia நீதிமன்றம் சென்றார்.
Oliviaவை ஒரு பெற்றோராக பிறப்புச் சான்றிதழில் சேர்ப்பது எதிர்காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் என அதிகாரிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட, அதை நிராகரித்த நீதிபதியான Sandra Wilkinson, பல பெற்றோர், பெற்றோர் என்னும் தங்கள் கடமையை தட்டிக்கழிக்க நீதிமன்றம் ஏறியதை நான் பார்த்துள்ளேன்.
ஆனால், Oliviaவோ அதற்கு மாறாக, தான் தாய் என்னும் பொறுப்பை ஏற்க விரும்புவதாக
கூறி நீதிமன்றம் வந்துள்ளார்.
ஆகவே, Eliza, Bill மற்றும் Olivia ஆகிய மூவருமே குழந்தையின் பெற்றோர்கள் என
பதிவு செய்யப்படவேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி Sandra
Wilkinson.