ஊடகங்களுக்கு டிரம்ப் விதித்த தடை: பெடரல் நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு
Judge Orders White House to Restore Press: CNN, MS NOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்த நிலையில், அதனை உடனடியாக விலக்கி கொள்ள வேண்டும் என்று பெடரல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகைக்குள் நுழைய ஊடகங்களுக்கு தடை
அமெரிக்காவின் பிரபலமான 3 செய்தி ஊடங்களான CNN, MS NOW, மற்றும் Politico ஆகியவை வெள்ளை மாளிகைக்குள் நுழைய டிரம்ப் நிர்வாகம் செப்டம்பர் 18ம் திகதி தடை விதித்தது.

இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது அல்ல, தவறான, போலி மற்றும் திசைதிருப்பும் செய்திகளை பரப்பும் நிறுவனங்களுக்கு எதிரானது மட்டுமே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் விளக்கி இருந்தார்.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்கள் X தளத்தில் வெளியிட்ட கூட்டறிக்கையில், தங்களது வலுவான கண்டனத்தை பதிவு செய்ததோடு, டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த தடை நடவடிக்கையை எதிர்த்து மூன்று செய்தி நிறுவனங்களும் டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்தது.
தடை நீக்க நீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக இன்று நடைபெற்ற பெடரல் நீதிமன்ற விசாரணையில், CNN, MS NOW மற்றும் Politico ஆகிய ஊடகங்களின் செய்தியாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை தற்காலிமாக நீக்குமாறு டிரம்ப் அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க மாவட்ட பெடரல் நீதிபதி டிம் கெல்லி(Tim Kelly) தன்னுடைய தீர்ப்பில், அமெரிக்க அரசாங்கத்தின் இந்த தடை நடவடிக்கை என்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஊடகங்கள் மீதான தடை உடனடியாக நீக்கப்பட்டு வெள்ளை மாளிகைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட வேண்டும். அத்துடன் இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என்றும் நீதிபதி கெல்லி உத்தரவிட்டுள்ளார்.
அதே சமயம் ஊடகங்கள் மீதான தடையை நியாயப்படுத்த அரசு முன்வைத்த தேச பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை நீதிபதி திட்டவட்டமாக நிராகரித்தார்.