உங்க மகள் நினைவுக்கு வரவில்லையா? கொடூர குற்றவாளியிடம் கேட்ட நீதிபதி
தமிழகத்தின் வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில் குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.
விளாத்திகுளம் வன்கொடுமை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் 11ஆம் திகதி 12ஆம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரு நபர் பைக்கில் சென்றது பதிவாகி இருந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனிஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

குற்றவாளியிடம் கேட்ட நீதிபதி
இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கு முன்னதாக குற்றவாளியிடம், உங்கள் தாய் மட்டும் தான் உங்களுடன் இருக்கிறார், உங்கள் மனைவியும், மகளும் பிரிந்து சென்று விட்டனர்.
ஏற்கனவே தண்டனை பெற்ற நீங்கள் செய்த இந்த சம்பவம் மிக கொடூரமானது. பிரேத பரிசோதனையை படித்தபோது தான் நீங்கள் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டீர்[கள் என தெரியவந்தது.
இச்செயலில் ஈடுபடும் போது உங்கள் மகள் நினைவுக்கு வரவில்லையா? அந்த குழந்தையை பாதுகாக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?
உங்களுக்கு கொடுக்கும் தண்டனை பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான கொடூரங்களுக்கு பாடமாக இருக்கும் என கூறிய படி இரட்டை தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.