சட்டவிரோதமாக செயல்படும் ட்ரம்ப் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
லாஸ் ஏஞ்சல்ஸில் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு படையை பயன்படுத்தியது சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கடந்த ஜூன் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற குடிவரவு எதிர்ப்பு போராட்டங்களை கட்டுப்படுத்த, தேசிய பாதுகாப்பு படையை அனுப்பினார்.
இதற்கு எதிராக, கலிபோர்னியா மாநில ஆளுநர் கெவின் நியூசம், ட்ரம்ப் அரசின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அமெரிக்க மாவட்ட நீதிபதி சார்லஸ் பிரெயர், ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு படையை உள்நாட்டு சட்டங்களை அமுல்படுத்த பயன்படுத்திய விதம், Posse Comitatus Act 1878 எனும் சட்டத்தை மீறுவதாக தீர்ப்பு வழங்கினார்.
இந்தச் சட்டம் அமெரிக்க இராணுவத்தை உள்நாட்டு சட்டங்களை அமுல்படுத்த பயன்படுத்த கூடாது என்பதை கூறுகிறது.
பாதுகாப்பு படையினர், "பாதுகாப்பு வளையங்களை அமைத்தல், போக்குவரத்து தடைகள், கூட்டத்தை கட்டுப்படுத்தல்" போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டது சட்டவிரோதம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ட்ரம்ப் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், "அமெரிக்க ஜனாதிபதி தலைமையில் தேசிய பொலிஸ் படையை உருவாகும் அபாயம் ஏற்படுத்துகிறார்கள்" என எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான தீர்ப்பு செப்டம்பர் 12 வரை நிலுவையில் உள்ளது. ட்ரம்ப் இந்த தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump National Guard ruling, Posse Comitatus Act violation, LA protests military deployment, Judge blocks Trump troops, Gavin Newsom vs Trump, Federal court Trump decision, US military domestic law, Trump authoritarian tactics, National Guard illegal use, Los Angeles protest crackdown