56 வயதில் புற்றுநோயுடன் போராட்டம்! அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமரின் மகன், ஹாலிவுட் நடிகர் மரணம்
அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமரின் மகனும், ஹாலிவுட் நடிகருமான ஜூலியன் மெக்மஹோன் புற்றுநோயுடன் போராடி உயிரிழந்தார்.
ஜூலியன் மெக்மஹோன்
1992ஆம் ஆண்டில் வெளியான Exchange Lifeguards திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜூலியன் மெக்மஹோன் (Julian McMahon).
அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமரான சர் வில்லியம் மெக்மஹோனின் மகனான இவர் 'Fantastic Four', 'Red' உள்ளிட்ட பல படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் நீண்டகாலமாக ஜூலியன் மெக்மஹோன் புற்றுநோயுடன் போராடி வந்தார். இந்த நிலையில் அவர் தனது 56வது வயதில் உயிரிழந்தார்.
அவரது மனைவி கெல்லி மெக்மஹோன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஜூலியன் மெக்மஹோனின் மறைவு ஹாலிவுட்டில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |