13 வயது குழந்தையால் எப்படி இப்படி சிக்ஸர் அடிக்க முடியும்? இந்தியாவின் வைபவ் குறித்து பாகிஸ்தான் வீரர் கேள்வி
இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஜுனைத் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி
சமீபத்தில் முடிந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ் சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுத்தது.
13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் சாதனையாக பதிந்தது.
Can a 13-year-old kid really hit such a long six????
— Junaid khan (@JunaidkhanREAL) December 7, 2024
🤦🏻♀️🤦🏻♂️🤦🏻♀️🤦🏻♂️ #INDvsAUS #AUSvIND #ChampionsTrophy2025 #SAvSL pic.twitter.com/KaQNxBGCNO
ஆனால், அவரது ஆட்டம் வயதை மீறியதாக இருப்பதாக சர்ச்சை கிளம்பியது.
ஜுனைத் கான் கேள்வி
இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து கேள்வி எழுப்பி, பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஜுனைத் கான் வீடியோயை பகிர்ந்துள்ளார்.
அதில் 13 வயது குழந்தையால் எப்படி இவ்வளவு நீளமான சிக்ஸர் அடிக்க முடியும்? என சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |