இலங்கை நடுவரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்ட டிராவிஸ் ஹெட், சிராஜ்: இருவருக்கும் அபராதம் விதித்த ஐசிசி
பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதியை மீறியதற்காக முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முகமது சிராஜ்
அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் சதம் (140) விளாசிய டிராவிஸ் ஹெட்டின் (Travis Head) விக்கெட்டை இந்திய வீரர் முகமது சிராஜ் (Mohammed Siraj) வீழ்த்தினார்.
அதனை ஆக்ரோஷத்துடன் கொண்டாடிய சிராஜ், அவரை நோக்கி வெளியே செல்லுங்கள் என்ற வகையில் சைகை செய்தார். இதனால் இருவருக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது.
டிராவிஸ் ஹெட்டும் ஏதோ அவரிடம் கூறினார். பின்னர் சிராஜிடம் நன்றாக பந்துவீசினீர்கள் என்று கூறியதாக ஹெட் தெரிவித்தார். ஆனால் தன்னிடம் ஹெட் மோசமான வார்த்தைகளை சொன்னதாக சிராஜ் கூறினார்.
ஐசிசி அபராதம்
இந்த நிலையில், ஹெட் மற்றும் சிராஜ் இருவருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது. வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.5ஐ மீறிய குற்றத்திற்காக, சிராஜுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது மொழி, செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் அல்லது ஆக்ரோஷமான எதிர்வினையைத் தூண்டும் செயல்களுக்காக ஐசிசி குற்றமாக கருதப்படுகிறது.
அதேபோல், "சர்வதேச போட்டியின்போது ஒரு வீரர், வீரர் ஆதரவு பணியாளர்கள், நடுவர் அல்லது போட்டி நடுவரை அவமதித்தல்" தொடர்பான வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.13ஐ மீறியதற்காக டிராவிஸ் ஹெட்டிற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இருவரும் கடந்த 24 மாதங்களில் அவர்கள் செய்த முதல் குற்றத்தை குறிக்கும் வகையில், தலா ஒரு Demerit புள்ளிகள் பெற்றனர்.
அத்துடன் ஹெட், சிராஜ் இருவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலே (இலங்கை) முன்மொழிந்த தடைகளை ஏற்றுக்கொண்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |