3வது முறையாக பிரதமர்- பதவியேற்பு விழா எப்போது? வெளியான தகவல்
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இந்திய பிரதமராக நரேந்திர மோடி சனிக்கிழமை பதவியேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை
18வது இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 292 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது..
Symphony of democracy: CEC Rajiv Kumar paints a portrait of gratitude to the incredible polling personnel. Despite facing tough challenges, they ensure no voter is left behind.#ChunavKaParv #DeshKaGarv #ECI #GeneralElections2024 pic.twitter.com/D0rHTfHhrJ
— Election Commission of India (@ECISVEEP) June 3, 2024
இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள TDP, JDU, SHS ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது.
3வது முறையாக பிரதமர்
இந்தியாவில் நேருக்கு பிறகு இரண்டாவது தலைவராக நரேந்திர மோடி தொடர்ந்து 3 வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் வருகின்ற ஜுன் 8ம் திகதியான சனிக்கிழமை நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
लोकसभा चुनाव-2024 में NDA को मिली विजय के उपरांत भाजपा केंद्रीय कार्यालय, नई दिल्ली में पीएम श्री @narendramodi, पार्टी के राष्ट्रीय अध्यक्ष श्री @JPNadda ने श्री @AmitShah, श्री @rajnathsingh की उपस्थिति में वहां उपस्थित समर्थकों व कार्यकर्ताओं को संबोधित किया। pic.twitter.com/niJOiReCEU
— BJP (@BJP4India) June 4, 2024
இதற்கிடையில் 17வது இந்திய நாடாளுமன்ற அமைச்சரவை கலைக்கபடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |