போட்டி தொடங்க சில நொடிகளே எஞ்சிய நிலையில்... ஒலிம்பிக் வீராங்கனை தகுதி நீக்கம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து பிரேக்டான்சர் ஒருவர், அவரது விளையாட்டு தொடங்கவிருந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முதல் முறையாக பிரேக்டான்ஸ்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பிரேக்டான்ஸ் போட்டிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த Manizha Talas என்பவர் பங்கேற்றுள்ளார்.
21 வயதான Talas போட்டி தொடங்குவதற்கு சில நொடிகளே எஞ்சியுள்ள நிலையில், அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகள் கலவைக்கிடமாக இருப்பதாக குறிப்பிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2021ல் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து நாட்டைவிட்டு வெளியேறிய Talas தற்போது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் புலம்பெயர்ந்தோருக்கான அணி ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
தற்போது தமது 12 வயது சகோதரனுடன் அவர் ஸ்பெயினில் வசித்து வருகிறார். ஆகஸ்டு 9ம் திகதி தனது போட்டியின் போது அவர் ஆப்கான் பெண்களின் விடுதலை என்ற வாசகத்துடன் பதாகை ஒன்றை வெளிக்காட்டினார்.
போட்டியில் இருந்து தகுதி நீக்கம்
மக்கள் கூட்டம் உடனே ஆர்ப்பரித்தது. அவரது செயலுக்கு விளக்கமளித்த Talas, தன்னால் சாத்தியமானதை மக்களுக்குக் காட்ட விரும்பினேன் என்றார்.
ஆனால், அரசியல் வாசகங்களை பொதுவெளியில் வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டு போட்டியில் இருந்து நீக்கியுள்ளது World DanceSport Federation.
ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியேறியதாக குறிப்பிட்டு தலிபான்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் Talas ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |