இந்திய அணியில் திட்டமிட்டு ஒதுக்கப்படும் இளம் வீரர்! BCCI-யிடம் நீதி கேட்கும் ரசிகர்கள்
இந்திய அணியில் சஞ்சு சாம்சன் ஒதுக்கப்படுவதாகவும், அவருடைய திறமைக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்று ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றோடு வெளியேறிய் இந்திய அணி, அடுத்து இந்தியாவில், நியூசிலாந்து அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், ரோகித் சர்மா கேப்டனாகவும், கே.எல்.ராகுல் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர இளம் வீரர்களான வெங்கடேஷ் அய்யர், இஷான் கிஷான், ஆவேஷ் கான் போன்றோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Kumar Sangakara could recognize but when will BCCI recognize Sanju Samson ? #JusticeForSanjuSamson pic.twitter.com/aqv2iHU6Dc
— Just Butter (@JustButter07) November 9, 2021
இந்த வரிசையில், சஞ்சுசாம்சனுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று இணையவாசிகள் டுவிட்டரில் #JusticeforSanjuSamson என குறிப்பிட்டு, அவர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புள்ளி விவரங்களை குறிப்பிட்டு வருகின்றனர்.
So as usual Sanju is dropped? Man literally had his best IPL season?
— RO45 ☀️ (@Maanvi_264) November 9, 2021
Sanju started playing IPL at the age of 18 also won the emerging player award. He is now 26!
If groomed earlier he could hv been our no4.
Don't want him to be a wasted talent?#JusticeForSanjuSamson pic.twitter.com/eRi3Vuvsll
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சஞ்சுசாம்சன் சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார்.
கடந்த இலங்கை தொடருக்கு பின் ஏன் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, ராஜஸ்தான் அணியில் பயிற்சியாளரான சங்ககாராவுக்கு தெரிந்த அவருடைய திறமை பிசிசிஐ-க்கு தெரியவில்லையே என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
Actually what really happening for sanju samson. He's such a wonderful batsman and wicket keeper his deserve to play in Indian Team . Why didn't @BCCI give chance to him. He has proved his talent many matches.? Hard luck @IamSanjuSamson.#JusticeForSanjuSamson pic.twitter.com/lUFe4hZPyB
— Triggered Indian (@trigger_Indian) November 9, 2021