60 ஆண்டுகள் நிறைவு..வெற்றிகரமாக முடித்த ஜஸ்டின் ட்ரூடோ
கனடா மற்றும் தென் கொரியா இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவையொட்டி, ஜஸ்டின் ட்ரூடோ இருதரப்பு பயணத்தை வெற்றிகரமாக முடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணத்தை முடித்த ட்ரூடோ
தென் கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு ஜனாதிபதி யூன் சுக் யோலுடன் சந்திப்பை நடத்தினார்.
அங்கு இரு நாடுகளின் தலைவர்களும் தங்கள் நட்பை ஆழப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளை நெருக்கமாக ஒருங்கிணைக்கவும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் ட்ரூடோ பரஸ்பர அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக கனடா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
@JustinTrudeau (Twitter)
அத்துடன் இருநாட்டு உறவுகளின் 60வது ஆண்டு நிறைவையொட்டி, ஜஸ்டின் ட்ரூடோ இருதரப்பு பயணத்தை வெற்றிகரமாக முடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ கொரியாவில் இருந்து புறப்படுவதற்கு முன், கப்யோங்கில் நின்று போரின்போது கனடாவின் வீரப்பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், கனேடிய நினைவுச் சின்னத்தில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
@JustinTrudeau (Twitter)
ட்ரூடோவின் பதிவு
இந்த நிலையில் கொரியப் போரின்போது கனடாவின் பங்களிப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், 'கொரியப் போரின்போது கனடாவின் பங்களிப்பு வீரமிக்கது. அன்றில் இருந்து நமது இரு நாடுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
சேவை செய்த மற்றும் தியாகம் செய்த துருப்புகளை நாம் நினைவுகூரும்போது, 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் கொண்டாடும்போது, நாமும் முன்னோக்கிப் பார்ப்போம் - இதோ அடுத்த 60 ஆண்டுகள்!' என தெரிவித்துள்ளார்.
Canada’s contributions during the Korean War were heroic. Ever since, our two countries have been linked. As we remember the troops who served and sacrificed, and as we celebrate 60 years of diplomatic relations, let’s also look ahead – here’s to the next 60 years! pic.twitter.com/YREix8P5Ww
— Justin Trudeau (@JustinTrudeau) May 19, 2023