ட்ரூடோவைத் தொடர்ந்து உளறிக்கொட்டும் உலகத்தலைவர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள தலைவர்
உலக நாடுகள் சிலவற்றில், தங்கள் பேச்சுத்திறமையாலேயே மக்களைக் கவர்ந்து, ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால், தற்போது சில உலகத் தலைவர்கள் உளறிக்கொட்டும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளதை ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கி வருகின்றன.
உளறிக்கொட்டும் தலைவர்கள்
அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனுக்கு 81 வயது ஆகிறது. தன் வயது காரணமாக, சில நேரங்களில் அவர் சிலருடைய பெயர்களை மறந்துவிடுவதுண்டு. அதனால் அவர் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருகிறார். குறிப்பாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், இந்த விடயத்தில் பைடனை அவ்வப்போது வம்புக்கிழுப்பதுண்டு.
இந்நிலையில், சமீபத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, போரில் ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று உளறிக்கொட்டியதால், இணையத்தில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது நினைவிருக்கலாம்.
உளறிக்கொட்டும் உலகத்தலைவர்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள தலைவர்
இந்நிலையில், ஜோ பைடன் உளறுவதாக கேலி செய்த முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பே இப்போது உளறிக்கொட்டியது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
சனிக்கிழமையன்று பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ட்ரம்ப், இந்நாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவையும் போட்டு குழப்பிக்கொண்டுள்ளார்.
ஒபாமா இப்போது அணு ஆயுதங்கள் குறித்து பேசத்துவங்கியுள்ளதால், புடினுக்கு அவர் மீது மரியாதையே இல்லாமல் போய்விட்டது என்று கூறினார் ட்ரம்ப்.
அதாவது, ஜோ பைடன் அணு ஆயுதங்கள் குறித்து பேசத்துவங்கியுள்ளதால், புடினுக்கு அவர் மீது மரியாதையே இல்லாமல் போய்விட்டது என்று சொல்வதற்கு பதிலாக ஒபாமா பெயரை தவறுதலாகப் பயன்படுத்திவிட்டார் ட்ரம்ப். கூட்டத்தில் வீராவேசமாக உரையாற்றிய ட்ரம்ப், ஜோ பைடனை ஒபாமா என்று கூற, கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அமைதியாகிவிட்டார்களாம்!
ஜோ பைடனை வயதானவர், உளறுகிறார் என்று கூறிய ட்ரம்பே இப்போது உளறுகிறாரே என மக்கள் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், கடந்த ஆறு மாதங்களில் ட்ரம்ப் இப்படி உளறிக்கொட்டுவது, இது மூன்றாவது முறையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |