உக்ரைனை ஆதரிப்பது குறித்து வெளிநாட்டு தலைவருடன் பேச்சுவார்த்தை..கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட புகைப்படம்
லக்ஸம்பர்க் நாட்டின் பிரதமரை சந்தித்த புகைப்படத்தை கனேடிய பிரதமர் ஜஸ்டன் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்
உக்ரைனை ஆதரிப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து சேவியர் பெட்டலிடம் விவாதித்ததாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்
உக்ரைனை ஆதரிப்பது, காலநிலை மாற்றத்தை எதிர்த்து போரிடுவது ஆகியவை குறித்து லக்ஸம்பர்க் பிரதமரிடம் உரையாடியதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஐரோப்பிய நாடான லக்ஸம்பர்க்கின் பிரதமர் சேவியர் பெட்டலை சந்தித்து பேசியுள்ளார்.
அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ட்ரூடோ, பல விடயங்கள் குறித்து அவருடன் பேசியதாக கூறியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், ' கனடா-லக்ஸம்பர்க் உறவு வலுவானது, மற்றும் சேவியர் பெட்டலுடன் இணைந்து மேலும் அதை பலப்படுத்த நான் இணைந்து செயல்படுகிறேன். இன்று நாங்கள் அந்த வேலையைப் பற்றி பேசினோம்.
The Canada-Luxembourg relationship is strong, and @Xavier_Bettel and I are working together to make it even stronger. We spoke about that work today – as well as supporting Ukraine, fighting climate change, increasing trade, creating jobs, and strengthening the French language. pic.twitter.com/yABk9cD5Ly
— Justin Trudeau (@JustinTrudeau) November 1, 2022
அத்துடன் உக்ரைனை ஆதரிப்பது, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, வர்த்தகத்தை அதிகரிப்பது, வேலைகளை உருவாக்குவது மற்றும் பிரெஞ்சு மொழியை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் விவாதித்தோம்' என தெரிவித்துள்ளார்.
Olivier Matthys/AP