உக்ரைன் போரினால் பாதுகாப்பு பிரச்சனையை எதிர்கொள்ளும் நாடு..ஜனாதிபதியை சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோ
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக மால்டோவா எதிர்கொள்ளும் அழுத்தங்கள் குறித்து, அந்நாட்டு ஜனாதிபதியிடம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவாதித்தார்.
பாதுகாப்பு பிரச்சனை
கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவா, உக்ரைன்-ரஷ்யா போரினால் பாதுகாப்பு பிரச்சனைகளை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மால்டோவா ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது மால்டோவா எதிர்கொள்ளும் மனிதாபிமான, பொருளாதார மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களைப் பற்றி விவாதித்தார்.
ட்ரூடோ அறிக்கை
பின்னர் இந்த சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 'உக்ரேனிய மக்களுக்கு உதவியதற்காக மால்டோவா ஜனாதிபதி மையா சந்துவுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தேன்.
மால்டோவாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான கனடாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினேன். மேலும் மால்டோவாவின் தேசிய காவல்துறை பாதுகாப்பை வழங்குவதற்கான திறனை அதிகரிக்க புதிய ஆதரவை அறிவித்தேன்' என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்ய படையெடுப்பால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து தப்பியோடிய 8,00,000 உக்ரேனியர்களுக்கு, மால்டோவா தனது கதவுகளை திறந்து தங்குமிடம், பாதுகாப்பு மற்றும் பிற மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக ட்ரூடோ பாராட்டினார்.
President @SanduMaiaMD and I sat down this afternoon and spoke about the humanitarian, economic, and security pressures Moldova is facing because of Russia’s invasion of Ukraine. I thanked her and the Moldovan people for the work they have done to help Ukrainian refugees, I… pic.twitter.com/t2Ri5QYZxr
— Justin Trudeau (@JustinTrudeau) May 11, 2023