உக்ரைனுக்கு அதிபயங்கர ஆயுதங்களை வழங்கிய பிரித்தானியா: ரஷ்யா கடும் எதிர்ப்பு
ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் பிரித்தானியா, உக்ரைனுக்கு அதி பயங்கர ஆயுதங்களை வழங்கியதற்கு எதிராக ரஷ்யா குரல் கொடுத்துள்ளது.
உக்ரைன்- ரஷ்யா போர்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடுமையான போர் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிரித்தானியா உக்ரைனுக்கு புதிதாக, நிறைய ஆயுதங்களை அனுப்பியுள்ளது.
@afp
இந்நிலையில் Storm shadow என்ற நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணையை பிரித்தானியா வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆயுதம் உக்ரைனிலிருந்து நீண்ட தொலைவில் பறந்து, ரஷ்யாவை தாக்கும் வல்லமை படைத்தவை என பிரித்தானிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் அது எவ்வளவு தூரம் பயணிக்கும், சரியாக இலக்கை சென்றடையுமா எனவும், உக்ரைனிடமுள்ள சிறிய விமானங்களில் அவற்றை எடுத்து செல்ல முடியுமா என்பது போன்ற கேள்விகள் எழுவதாக, ஸ்கை ஊடகத்தின் ராணுவ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா எதிர்ப்பு
இந்நிலையில் ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஸ்கொவ், பிரித்தானியா உக்ரைனுக்கு Storm shadow என்ற நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வழங்கியதற்காக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
@mbda
அவர் ரஷ்ய அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனமான RIAவிடம் பேசிய போது
’Storm shadow போன்ற நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பிரித்தானியா, உக்ரைனுக்கு வழங்குவது குறித்து ரஷ்யா மிகவும் எதிர்மறையாக உள்ளது , இதற்கு பிரித்தானியா பதிலளிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
@getty
மேலும் ’இது போன்ற ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவது, அபாய எல்லையை மீறுவதை போன்றது’ என திமித்ரி பெஸ்கொவ் தெரிவித்துள்ளார்.
Storm shadow
பிரித்தானியாவில் இதுபோன்ற 700க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உள்ளன எனவும் , ஒவ்வொன்றும் பாரிய விலை உடையவை எனவும் தெரிய வந்துள்ளது.
Storm shadow என்ற இந்த ஏவுகணைகள், 20 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஈராக் மற்றும் லிபியாவில் மோதல்களில் ஈடுபட்ட போது பிரித்தானிய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.